கமலுக்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வெந்து தணிந்தது காடு, 10 தலை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவற்றைத் தொடர்ந்து நடிகர் சிம்புவின் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் கமல் 234 என்ற திரைப்படம் என தெரியவந்துள்ளது. சிம்புவின் 50ஆவது படமும் இது தானாம்‌‌.

அதாவது இந்த படத்தில் நடிகர் சிம்பு உலகநாயகன் கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

கமலுக்கு வில்லன் சிம்புவா இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்கல என ரசிகர்கள் வியப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.