நெல்சன் திலீப் குமாரின் வேட்டை மன்னன் திரைப்படம் கைவிடப்பட்டது ஏன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

Simbu About Reason of Vettai Mannan Dropped : தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வைத்து டார்க் காமெடியில் டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இராமாயணமும் அக்னி தீர்த்தமும்.!

இதனைத் தொடர்ந்து நெல்சன் தற்போது பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் கோலமாவு கோகிலா என்ற படத்திற்கு முன்னதாகவே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட பாதி அளவு நிறைவடைந்த நிலையில் அதன் பின்னர் படம் கைவிடப்பட்டது.

கடை திறப்பு விழாவிற்கு Mass ஆக வந்த Thala Dhoni – வைரலாகும் வீடியோ | Anlon Art Saloon Launch

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை சிம்பு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது ஒரு கல்ட் டார்க் காமெடி பிலிம். அப்போதைய காலகட்டத்தில் இது சரியாக இருக்காது என்பதால்தான் இந்தப் படத்தை கைவிட்டோம்‌.

மேலும் வேட்டை மன்னன் படத்தில் இருந்த டார்க் காமெடி 10% கூட டாக்டர் படத்தில் இல்லை என கூறியுள்ளார். இதனைக் கேட்ட சிம்பு ரசிகர்கள் அப்போ வேட்டை மன்னன் திரைப்படம் வெளியாகி இருந்தால் நிச்சயம் செம காமெடியாக இருந்திருக்கும், வசூலிலும் மாஸ் காட்டி இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் திரும்பவும் இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என கூறுகின்றனர்.