
Silukkuvarpatti Singam Review :
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் கதைக்களம் :
அப்பாவியாக பயந்த சுபாவம் உள்ள கான்ஸ்டேபிளாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.
ஆப் பாயில்-காக மட்டுமே கோபப்படும் இவர் எதிர்பாராத விதமாக மிக பெரிய ரவுடி மீது கை வைத்து விடுகிறார்.
இதனால் அந்த ரவுடி எப்படியாவது விஷ்ணு விஷாலை கொன்றே தீருவேன் என தேடுகிறார்.
இவரிடம் இருந்து விஷ்ணு விஷால் தப்பிக்க என்னவெல்லாம் செய்கிறார்? இறுதியில் விஷ்ணு விஷால் சிக்கினாரா? ரவுடி சிக்கினாரா? என்பது தான் இப்படத்தின் காமெடி கலாட்டா கலந்த கதை.
விஷ்ணு விஷால் :
விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இப்படத்தில் கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களை போலவே தன்னுடைய எதார்த்தமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ரெஜினா :
ரெஜினா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் ரெஜினாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி செமையாக பொருந்தியுள்ளது.
ஓவியா :
ஓவியா இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் இரண்டு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மற்றபடி படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை.
யோகி பாபு :
யோகி பாபு இந்த படம் முழுவதும் வரும் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். ரவுடியுடன் சேர்ந்து இவர் செய்யும் காமெடிகள் தியேட்டரை சிரிப்பு சத்தத்தில் அதிர வைப்பது உறுதி.
இதர நடிகர் நகைகள் :
மேலும் இப்படத்தில் நடித்துள்ள கருணாகரன், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ் ஆகியோரின் காமெடி கலாட்டாக்களும் ரசிகர்களை சிரிக்க வைப்பது கேரண்ட்டி.
தொழிநுட்பம் :
இசை :
லியோன் ஜேம்ஸ் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படத்தின் பின்னணி இசையில் பெடலெடுத்துள்ளார்.
ஒளிப்பதிவு :
ஜே. லட்சுமண் ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்சிகள் அனைத்தும் எதார்த்தமாக அமைந்துள்ளன. ஆனாலும் சில இடங்களில் கலர் Correction-ல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
எடிட்டிங் :
இந்த படத்திற்கும் ரூபன் தான் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். அதையும் வழக்கம் போல சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்.
இயக்குனர் :
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் எழுத்தாளர் செல்லா அய்யாவு இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
காமெடி படம் என்பதால் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படம் பார்ப்போரை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அவரின் எதிர்பார்ப்பு படியே இப்படம் படம் பார்க்கும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
தம்ப்ஸ் அப் :
1. படத்தின் காமெடி
2. விஷ்ணு விஷால், யோகி பாபு, கருணாகரன் காமெடி கலாட்டா
தம்ப்ஸ் டவுன் :
1. ஒளிப்பதிவில் கலர் Correction-ல் கவனம் செலுத்தி இருக்கலாம்.