Shruti Raj Reply to Fan

ஆமா என் புருசன் கோமாளி தான் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ரியோ ராஜ் மனைவ ஸ்ருதி உருக்கமாக பதிலளித்துள்ளார்.

Shruti Raj Reply to Fan : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் ரியோ ராஜ்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறார். தொடர்ந்து நடிகர் ஆரியை சீண்டி வருவதால் பலரும் ரியோவை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது ரியோ ராஜ் மனைவி ஸ்ருதியிடம் ரசிகர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் உங்கள் புருஷன் ஒரு கோமாளி என கூறியுள்ளார்.

அதற்கு ஸ்ருதி உருக்கமாக பதிலளித்துள்ளார். உன் புருஷன் கோமாளி என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அது சாதாரண விஷயம் அல்ல. கோமாளி எவ்வளவு கஷ்டத்தில் தானே எதுக்கு கேட்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும். அது மிகப்பெரிய வேலை. ஆகையால் என்னுடைய புருசனின் நீங்கள் கோமாளி என கூறியதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என பதிலளித்துள்ளார்.

ஸ்ருதியின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.