ரசிகர்களை கவரும் ஆடையில் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஷ்ரேயா சரண்.

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரேயா சரண். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தார். பிறகு வெளிநாட்டு நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சத்தம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டு பல மாதங்கள் கழித்து தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அறிவித்தார்.

அதன் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது கவர்ச்சி உடையில் நடன அசைவுகளால் ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்