ஷூட் தி குருவி படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் மதிவாணன் என்பவர் இயக்கத்தில் அர்ஜய், ஷாரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஷிக் உசேன், சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன், மணி வைத்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஷூட் தி குருவி.

படத்தின் கதை :

காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது மட்டம், அல்லாமல் தன்னை பற்றிய தகவல்கள் வெளி உலகத்திற்கு முழுமையாக தெரியாமல் வாழும் குருவி ராஜன், எளிமையான இரண்டு பேரால் கொல்லப்படுவதால், அவனுடைய சாம்ராஜயமே சரிந்து விடுகிறது. யார் அந்த குருவி ராஜன் ஏன் அவர் கொல்லப்பட்டார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் :

படத்தில் ஹீரோவாக நடித்துள்ள அர்ஜய் ஆக்சன் எமோஷன் சென்டிமென்ட் என அனைத்து விதமான காட்சிகளிலும் பக்காவாக ஸ்கோர் செய்துள்ளார்.

படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் அனைவரும் அவர்களது கதாபாத்திரங்களை திறம்பட நடித்துக் கொடுத்துள்ளனர்.

படத்தின் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது. மேலும் ஒளிப்பதிவு பாராட்ட வைக்கிறது. பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் ஒரே அறையில் படமாக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இயக்குனர் மதிவாணன் தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்பக்கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக கொண்டு இந்த படத்தை சீரியஸ் ஆகவும் பிளாக் காமெடி படமாகவும் கொண்டு சென்றுள்ளார்.

REVIEW OVERVIEW
ஷூட் தி குருவி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
shoot-the-kuruvi-movie-reviewமொத்தத்தில் ஷூட் குருவி சிறிய படமானாலும் ரசிக்க வைக்கும்.