நடிகை அனுஷ்கா வினோதமான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஷாக்கான தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. தெலுங்கு திரைத்துறையை சார்ந்த இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்து வரும் அனுஷ்கா தற்போது அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது சமீபத்திய நேர்காணலில் நடிகை அனுஷ்கா எனக்கு சிரிக்கும் வியாதி உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் சிரிப்பது எல்லாம் ஒரு வியாதியா என நீங்கள் நினைக்கலாம் ஆனால் நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பேன் என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. இதனால் நான் படப்பிடிப்பில் சிரிக்க ஆரம்பித்தால் அப்போது படப்பிடிப்பை கூட நிறுத்த வேண்டியதாக இருக்கும். இதனால் பல சிரமத்தை சந்திக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து வைரலாகி வருகிறது.