நடிகை சோபிதா துலிபாலா மனம் திறந்து பகிர்ந்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரவேற்பை பெற்றிருந்த பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் வானவில் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் சோபிதா துலிபாலா. தற்போது பாலிவுட் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் காதல் வதந்திகளில் அவ்வப்போது சிக்கி வருகிறார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்திருக்கும் சோபிதாவின் சுவாரஸ்யமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றின வதந்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது வருங்கால கணவர் குறித்த சில ஆசைகள் எனக்குள் இருக்கிறது. முதலில் அவர் வாழ்க்கையில் உயரத்துக்கு சென்றாலும் அடக்கமானவராக இருக்க வேண்டும். நல்ல குணம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி உள்ளது.