Shoaib Akhtar
Shoaib Akhtar

Shoaib Akhtar – இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது.

இதில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது. இருந்தும் இந்திய அணியின் கேப்டன் விராட் அந்த போட்டியில் 123 ரன்கள் எடுத்து இருந்தார்.

சதம் அடித்த மகிழ்சியில் விராட், தனது பேட்டை காட்டி, “எனது பேட் மட்டுமே பேசும்” என்பது போல சைகை செய்தார்.

ஆனால், ஆஸ்., அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது, ஆஸ்., அணி கேப்டனிடம் வார்த்தை போர் புரிந்தார்.

இருவருக்கும் மோதல் ஏற்படவே நடுவர் வந்து அந்தனை தடுத்து இருவருக்கும் எச்கரிக்கை செய்தார்.

இந்த நிலையில், அந்த வாக்குவாதத்தை பல தரப்பினரும் ஆதரவு மற்றும் எதிர்பு தெரிவித்தவாறு இருக்கின்றனர்.

அந்த வகையில், பாகிஸ்தான் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தரும் விராட் கோலிக்கு ஆதரவு தருவது போன்ற தனது கருத்தை கூறி இருக்கிறார்.

சோயிப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவித்தது :

“விராட் கோலி, தற்போது இருக்கும் புதிய கிறிக்கெட்டின் சிறந்த வீரர். சிறிய வதிலேயே பல சாதனைகளை படைத்து உள்ளார். மேலும், இளம் வயது கொண்ட விராட் ஆக்ரோஷம் கொண்டவராகவே உள்ளார்.

போட்டிகளில் ஆக்ரோஷம் மற்றும் வேகம் தேவை ஆனால் அது எல்லா போட்டிகளிலும் அவசியம் இல்லை.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது அந்த ஆக்ரோஷம் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும்.”

என்றும் தயவு செய்து விராட் கோலியை திட்டாமல் இருக்குமாறு கூறிக்கொண்டும் தனது ஆதரவை பதிவிட்டு உள்ளார்.