சிவானி நாராயணன் வைத்திருக்கும் காஸ்ட்லியான நாயின் விலையை தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து அனைவருக்கும் பரிசயமானவர் சிவானி நாராயணன். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி பட்டி தொட்டி எங்கும் பாப்புலரான இவர் வெள்ளிதிரையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது கிளாமர் உடையில் எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அதேபோல் ஷிவானி நாராயணன் அவரது செல்ல நாயுடன் எடுக்கப்படும் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருவார். தற்போது அந்த நாயின் விலை 50 ஆயிரம் என தெரியவந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்து வைரலாகி வருகிறது.