சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சிவாங்கி நயாகரா ஃபால்சில் இருந்து வீடியோ எடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் கலந்து கொண்ட சிவாங்கி தனது பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையாடித்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவாங்கி தனது நகைச்சுவையினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது மட்டுமின்றி தனக்கென தனி இடத்தையும் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அஸ்வினுடன் இவர் செய்த நகைச்சுவை அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றிருக்கும் சிவாங்கி இதற்கிடையே சில படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த சிவாங்கி இதனைத் தொடர்ந்து வடிவேலுக்கு மகளாக “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிவாங்கி அவ்வப்போது தனது instagram பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதில் சிவாங்கியை 50 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அதனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் உடனடியாக வைரலாகிவிடுகிறது. இந்நிலையில் எப்போதும் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளும் சிவாங்கி தற்போது நயாகரா ஃபால்சில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் நயாகரா ஃபால்சின் அழகை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.