Shivangi in Sivakarthikeyan Don Movie

குக் வித் கோமாளி சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shivangi in Sivakarthikeyan Don Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அயலான் மற்றும் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து அட்லியின் உதவி இயக்குனரான சிபிசக்கரவர்த்தி இயக்கத்திலும் அனிருத் இசையிலும் உருவாகவுள்ள திரைப்படம் டான் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரின் மனதிலும் இடம் பிடித்த சிவாங்கி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா, பாலா, சூரி, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.