சிவகார்த்திகேயன் அடுத்ததாக மடோனா அஸ்வின் இயக்கப் போகும் புதிய படத்தில் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் “டான்” படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முன்பெல்லாம் ஒவ்வொரு படத்தில் நடித்து வெளியாகும் வரை காத்துக் கொண்டிருந்த இவர் தற்போது பல படங்களை சேர்த்து நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளிவர தயாராகி இருக்கும் படங்களான ‘அயலான், பிரின்ஸ்’ திரைப்படங்களைக் காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கப் போகும் படத்தில் நடித்த உள்ளார். தற்போது படத்திற்கான ப்ரோமோ வீடியோ சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது “விக்ரம்” படத்தைப் போல ப்ரோமோவோடு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நடிகை ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் எனவே இப்படத்திற்கு சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் சிவகார்த்திகேயனின் இந்த புதிய திரைப்படத்துக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.