
Shankar & Vijay Combo : முதல்வன் படத்தில் தளபதி விஜய் நடிக்காமல் போனது ஏன் என்பது பற்றி வருத்தத்துடன் ஷங்கர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் முதல்வன்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜயை வைத்து இயக்குமாறு ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஷங்கர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் முதல்வன் படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது ஏன் என தெரிவித்துள்ளார்.
அதாவது முதல்வன் படம் விஜய்க்காக உருவாக்கப்பட்டது தானாம். கதையை எழுதி முடித்து விட்ட பிறகு விஜயை சந்திக்க ஒருவர் மூலமாக முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அந்த நபர் செய்த ஒரு சில செயல்களால் விஜயால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதன் பிறகு விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஒரு நாள் நாம் நேரடியாக சந்தித்து பேசி இருந்தாலே இந்த படத்தில் நடித்திருப்பார் என வருத்தப்பட்டு கூறியுள்ளார்.
அதன் பின்னர் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பன் படத்தில் இவர்கள் கூட்டணி உருவானது, தற்போது அந்த கூட்டணி முதல்வன் 2 படத்திற்காக மீண்டும் உருவாக வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.