நடிகர் ஷாருக்கான் ரசிகர்களிடம் உரையாடிய போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா குறித்து பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழும் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதில் அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து
உரையாடி இருக்கிறார் அதன் பதிவுகள் சில தற்போது வைரலாகி வருகிறது.

அதில், விஜய் சேதுபதி குறித்த கேள்விக்கு ஷாருக்கான் அவர்கள், ‘அவர் ஒரு எளிமையான மனிதர் மற்றும் திறமையான நடிகர் அவரிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்’ என்று கூறியிருக்கிறார். அதையடுத்து நயன்தாரா பற்றிய கேள்விக்கு, ‘அவர் அழகானவர், மிகவும் இனிமையானவர் என்றும் அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது’ என தெரிவித்திருக்கிறார். இவரது இந்த பதிவுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.