ஸ்ரீ ரெட்டிக்கு பிறகு திரையுலகில் நடந்து வரும் பாலியல் தொல்லைகளை பற்றி தினம் தினம் ட்வீட் செய்து பலரின் முகத்திரைகளை கிழித்து வருகிறார் சின்னமயீ.

வைரமுத்து, ராதா ரவி ஆகியோர்களை தொடர்ந்து அடுத்தடுத்து பலர் இந்த விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாலியல் தொல்லை பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் ஏற்படுகிறது.

மிருதங்க வித்துவான் ஆர்.ரமேஷ் என்பவர் இளைஞர் ஒருவரிடம் செய்த சிலிமிஷம் குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்த டீவீட்டில் பாதிக்கப்பட்ட இளைஞரின் பெயரை குறிப்பிடவில்லை.

https://platform.twitter.com/widgets.js

இது குறித்து அந்த இளைஞர் கூறியிருப்பதாவது எனக்கு 13 வயது இருக்கும் பொது மிருதங்க வித்துவான் எங்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் என்னுடைய ஆணுறுப்பின் மீது கை வைத்தார்.

ஆனால் அது எதர்ச்சையாக தெரியாமல் நடந்து இருக்கும் என எண்ணினேன். அதன் பின்னர் அவருடன் அஞ்சலி என்ற படத்திற்கு சென்றிருந்தோம். அப்போது தியேட்டரில் மீண்டும் இந்த சம்பவம் நடைபெற்றது.

நான் அவரை எதிர்த்து பார்த்த போது ஏன் உன் நண்பர்களின் இதையெல்லாம் செய்ததில்லையா? என கேட்டார். நான் இல்லை என கூறினேன். அதன் பின் சில வருடங்களுக்கு பின்னர் அவரை சந்தித்தேன்.

அப்போது என்னுடைய குடும்பத்தினர் என்னை அறிமுகப்படுத்திய போது அவர் தெரியும் அஞ்சலி படத்திற்கு சென்றிருந்தோமே என அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்துவது போல பேசி இருந்தார் என கூறியுள்ளார்.