serials this week trp rating update
serials this week trp rating update

டிஆர்பி யில் மாஸ் காட்டும் டாப் 5 சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. வாராவாரம் டிஆர்பி ரேட் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பிஎல் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

இந்த வாரம் முதல் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் பிடித்துள்ளது. ஏனெனில் எழில் மற்றும் கயல் திருமணம் பல தடைகளைத் தாண்டி எப்படி நடக்கப் போகிறது என்ற கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது.

இரண்டாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் பிடித்துள்ளது. ஆனந்திக்கு வரப்போகும் ஆபத்தை அன்பு எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது குறித்து கதை பரபரப்பாக நடந்து வருகிறது.

மூன்றாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் இடம்பெற்றுள்ளது. சூர்யாவின் கல்யாண வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க சூர்யா அர்ச்சனா கழுத்தில் தாலி கட்டுவாரா இல்லை நந்தினி கழுத்தில் தாலி கட்டப் போகிறாரா என்ற கோணத்தில் கதை நகர்ந்து வருகிறது.

நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும் ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியலும் இருந்து வருகிறது. இந்த வாரம் டாப் 5 இடத்தையும் சன் டிவி சீரியல்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.