பாம்புடன் போஸ் கொடுக்கும் ரீல்ஸ் வீடியோவை நடிகை ஃபரினா பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரையில் முதலில் வி ஜே வாக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை ஃபரினா. இத்தொடரில் தரமான வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்த இவர் தற்போது இத்தொடரின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வரும் இவர் தற்போது விளையாட்டாக ஒரு பெரிய பாம்பை தோல் மீது போட்டு போஸ் கொடுக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். கடைசியில் அதனை பார்த்து பயந்து ஓடும் அவரது அந்த சிரிப்பான வீடியோ ரசிகர்களை சிரிக்க வைத்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.