பாக்கியலட்சுமி தொடர் நடிகை திவ்யா கணேசனின் வேற லெவல் போட்டோஷூட் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் மக்களின் ஃபேவரிட் சீரியலாக நாள்தோறும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்யலட்சுமி. ட்ரெண்டிங்கில் டாப் லிஸ்டில் இடம் பிடித்து சக்கை போடும் போட்டு வரும் இத்தொடரில் அனைவரது கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையில் இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்களின் ஆப் ஸ்கிரீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும். அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேசன் மாடர்ன் உடையில் அசத்தலாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் வீடியோ ரசிகர்களை ஆச்சரிய அடைய செய்து வைரலாகி வருகிறது.