Senthil Ganesh

Senthil Ganesh : சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷிற்கு தல அஜித்தும் ஷாலினியும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் தங்கா தங்கா பாடலை சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷும் ராஜலக்ஷ்மியும் இணைந்து பாடி இருந்தனர்.

விஸ்வாசம் படத்தில் தனக்கு அஜித் வாய்ப்பு கொடுத்த இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் செந்தில் கணேஷும் ராஜலக்ஷ்மியும்.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் பாடிய பாடலை கேட்ட ஷாலினியும் இவர்களை பாராட்டி ஊக்குவித்துள்ளார். இதனால் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மியும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

விஸ்வாசம் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மடியில் அமோக வரவேற்பை பெற்றிருப்பதும் ரசிகர்கள் தொடர்ந்து பாடல்களை கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.