Senthil Balaji joins DMK
Senthil Balaji joins DMK

Senthil Balaji joins DMK – சென்னை: அமமுகவில் தினகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்த செந்தில் பாலாஜி, இன்று அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மேலும் அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைத்து கொண்டனர்.

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி.தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களில் ஒருவர் அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி.

அமமுகவில் தினகரனுக்கு அடுத்த இடத்திலும், அவருக்கு பக்க பலமாகவும் இருந்தவர். அமைப்பு செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர் பதவிகளை வகிக்கிறார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று தினகரன் 18 தகுதி நீக்க எம்.எல். ஏ க்களிடம் கூறினார்.

ஆனால் 18 பேரில் சிலர் இடைத்தேர்தலை சந்திக்க மேல்முறையீடு செய்வோம் என்றனர். இதே கருத்தைதான் செந்தில் பாலாஜியும் வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் தினகரன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் செந்தில் பாலாஜி தினகரன் மீது அதிருப்தி அடைந்தார்.

இதை தொடர்ந்து, ‘தனது ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

இதில் திமுகவில் சேரலாம் என செந்தில் பாலாஜி கூறியதாகவும், இதை ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியது’ .

இந்நிலையில் “இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்துக் கொண்டார்.

மேலும் அவருடன் பல ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்து கொண்டனர். மேலும் திமுகவில் இணைவதற்கான படிவத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டு மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்து கொண்டார்” ..!