ஆதியின் அறையில் பேசிக் கொண்டிருந்த பார்வதியை, எப்படியாவாது அகிலாவிடம் சிக்க வைக்க வேண்டும் என்று வனஜா சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். அதற்கேற்றவாறு தரகர் அங்கு வருகிறார். தரகர் அகிலா மற்றும் அவரது கணவரிடம் சில பெண்களின் போட்டோவை காட்டுகிறார்.

அதற்கு வனஜா போட்டோ பார்ப்பதற்கு முன்னர் ஜாதகம் பொருத்தம் பாருங்கள் என்கிறாள்.அதைக்கேட்டு அனைவரும் ஆமாம், அது தான் சரி. ஆதியின் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள் பொருத்தம் பார்க்கலாம் என்று தரகர் கூறுகிறார்.

உமா ஜாதகம் எடுப்பதற்காக செல்கிறாள், ஆனால் அகிலா, அவளை தடுத்து நானே கொண்டு வருகிறேன் என்றுச் சொல்லி மேலே செல்கிறாள்.

ஆதி, தன் அம்மா அகிலா, தன்  அறைக்கு வருவதை பார்வதியின் வீடியோ காலில் பார்த்து விடுகிறார். உடனே ஆதி, பார்வதியை காப்பாற்றுவதற்காக தன் அம்மாவுக்கு போன் செய்து ,  நான் உங்களுக்கு  ஒரு மெயில் அனுப்புகிறேன் அதை உடனே சரியாக உள்ளதா என்று பாருங்கள். என்கிறார்.

எதை கேட்ட அகிலா சரி உடனே பார்க்கிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பார்வதி, தான் அணிந்திருந்த ஆதியின் சட்டைடை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.

பார்வதி தப்பித்து வந்ததை பார்த்த வனஜாவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை . பின்னாலே பார்வதியின் அறைக்கு செல்கிறார். அங்கு பார்வதி, ஆதியின் சட்டையிடம் ஆசையாக பேசிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது  அரக்கி வனஜா, அந்த சட்டையை எடுத்து எரிக்க முயலுகிறாள் .பார்வதி எவ்வளவோ,கெஞ்சி பார்க்கிறார். ஆனாலும் வனஜா அந்த சட்டையில் எண்ணெய்யை ஊற்றி எரிக்கும் போது பார்வதி, வனஜாவை கீழே தள்ளி விடுகிறார்.

கீழே விழுந்த வனஜா, பார்வதியின் மேல் தன் கண்களாலே  எரிப்பது போல் பார்க்கிறாள்.அங்கு மும்பையில் ஷியாம்,ஆதிக்கு ஐடியா தருவதாக சொல்லி ஹெல்மேட் எடுக்க போய் அடி வாங்கிக் கொண்டு வருகிறார். வனஜாவின் கோபத்தில் சிக்கிய பார்வதியின் நிலை என்னவாகும் ? வனஜாவை எதிர்க்கொள்ள பார்வதி எடுக்கும் அதிரடி முடிவு என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.