மருத்துவ மனையில் சுயநினைவு இல்லாமல் இருக்கும் பார்வதியை , டாக்டர் பரிசோதிக்கிறார். அவர் பரிசோதித்த பின் , பார்வதியின் தலையில் ஆனி ஆழமாக இறங்கவில்லை. ஆதலால் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறுகிறார்.
ஆதி, பார்வதியை நினைத்து வருத்தப்படுகிறார். சிறிது நேரம் கழித்து பார்வதி கண் திறக்கிறார். சுயநினைவுடன் ஆதியிடம் , பார்வதி பேசுகிறார். ஆதிக்கு, பார்வதி பேசிய பின் தான் உயிரே வந்தது. பிறகு டாக்டர்கள் பரிசோதித்து பார்வதி, முழுவதும் குணமாகி விட்டார் என்று கூறுகிறார்.
பார்வதி குணமடைந்த சந்தோஷத்தில் மருத்துவமனைக்கு 50 லட்சம் நன்கொடையாக கொடுக்கிறார். அதற்கு டாக்டர்கள் இவ்வளவு தொகை கொடுக்கிறீர்கள். இவர் யார்? என்று கேட்கிறார்கள் ? அதற்கு ஆதி , பார்வதி என்னுடைய மனைவி என்கிறார். டாக்டர், இதனால் தான் ஆதி, கோபப்பட்டார் போல என்று நினைத்து கொள்கின்றனர். ஷியாம், ஆதி செய்தததை நினைத்து ஆச்சரியப்படுகிறார்.
அகிலா வீட்டில் வனஜா, பார்வதி கழட்டி வைத்த பரம்பரை செயினை தான் அணிய முயற்சி செய்கிறார் . அந்த செயினை உமா, வனஜா கழுத்தில் போடும் பொழுது, அகிலா தடுத்து விடுகிறார்.
நான் கொடுத்த பரம்பரை செயினை மீண்டும் நீ போட்டால், கொடுத்த பொருளை திரும்ப பெற்றதாகி விடும். அதனால் செயினை கொண்டு போய் பூஜை அறையில் வையுங்கள். பார்வதி மீண்டும் வந்தவுடன் நானே அவளுக்கு என் கையால் போட்டு விடுவேன் என்கிறார் அகிலா.
சுந்தரம், அகிலாவை பார்க்க வருகிறார். வந்தவர் தன் மகளை பற்றி விசாரிக்காமல் ஆதியைப் பற்றி நலம் விசாரித்தார். அவர் பேசியதைகேட்ட அகிலா தன் மகளை பற்றி கவலை படாமல், ஆதியைப் பற்றி கவலைப்படுகிறாய்.
உன் விசுவாசம் பற்றி என்ன கூறுவது என்கிறார் அகிலா. அகிலா, அருணைஅழைத்து பார்வதியை தேடச் சொல்கிறார். உமா பூஜையறையில் , பரம்பரை செயினை அகிலா கண் முன் படும்படி வைக்கிறார்.
அவள் வைக்கும் போது, லாக்கெட் திறந்து விடுகிறது. அதில் ஆதி, பார்வதியின் போட்டோ உள்ளது. அகிலா லாக்கெட்டில் உள்ள ஆதி, பார்வதியின் போட்டோவை பார்ப்பாரா ? பார்வதிக்கு ஏற்படும் விளைவு என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.