Sembaruthi 14.10.18
Sembaruthi 14.10.18

இன்றைய செம்பருத்தி எபிசோடில் பார்வதி சுயநினைவில்லாமல் கோமாவுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பார்வதியும், ஆதியும் ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஷியாமை உள்ளே இருக்க விடாமல் வெளியே செல்லும்படி கூறுகின்றனர். அதன்படி அவரும் செல்கிறார். அவர் சென்றதும் ஒரு வழியில் நல்லது தான்.

ஏனென்றால், அங்கு அகிலா வருகிறார். அகிலாவை சற்றும் எதிர்பார்க்காத ஷியாம் உடனே உள்ளே சென்று ஆதியிடம் உங்கள் அம்மா வருகிறார், என்கிறார். ஆனால் ஆதி அதை நம்பவில்லை , அதற்கு ஷியாம் நீ வேண்டுமென்றால் வெளியே வந்து பார் என்கிறார்.

மூவரும் வெளியே வந்து பார்க்கின்றனர். அதிர்ந்து போகிறார் ஆதி. உடனே பார்வதியை உள்ளே சென்று மறைந்துக் கொள்ளும்படி கூறுகிறார். அதன்படி பார்வதியும் ,மறைந்துக் கொள்கிறாள். அகிலா, ஆதியைப் பார்க்கிறார். ஆதி. ஏதும் அறியாதவர் போல் என்னம்மா, நீங்கள் எப்படி இங்கே ? என்கிறார்.

அதற்கு அகிலா உனக்கு நந்தினியால் ஆபத்து என்று தெரிந்ததும், நாம் சும்மா இருப்பேனா? அதான், நந்தினியை பார்த்து எச்சரித்து விட்டு வந்தேன். இனி நீ இங்கு இருக்க வேண்டாம்.கிளம்புஎன்கிறார். அதற்கு ஆதி, வந்த வேலையை முடிக்காமல் நான் வரமாட்டேன், என்கிறார்.

சரி, பார்த்து பத்திரமாக இரு, அடுத்த பிளைட்டில் நான் கிளம்புகிறேன் என்று சொல்லி அங்கிருந்து அகிலா புறப்படுகிறார். ஆதி மறைந்திருக்கும், பார்வதியை அழைக்கச் செல்கிறார். ஆனால் அங்கு பார்வதி மயங்கிய நிலையில் இருக்கிறார். பார்வதி ஒளிந்துக் கொள்ளும்  போது அங்கிருக்கும் ஆனியில் தலையை இடித்துக் கொள்கிறார்.

தலையில் ரத்தம்  வழிந்து மயங்கி விழுகிறாள். ஆதி பார்வதியை, மருத்துவமனைக்கு அழைத்து  செல்கிறார். அங்கு பார்வதிக்கு அனைத்து சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. ஆனாலும் பார்வதி, கண்ணை திறக்காமல் இருக்கிறார்.

இதனால் ஆதி கோபத்தில் டாக்டரை அடித்து விடுகிறார். அடுத்தப் பகுதியில் . பார்வதியின் சுயநினைவு வருமா, பார்வதியால் கதையில் மாற்றம் ஏற்படும் . சில எதிர்ப்பார்க்காத சம்பவங்கள் நடக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. பார்வதி சுயநினைவு திரும்புமா? ஆதியின் நிலை என்னவாகும்? அடுத்த பகுதியில் பார்க்கலாம்..