வேலை முடித்து வீடு திரும்பும் சுந்தரதிடம் , வனஜா, உன் மகள் எந்த நேரமும் போனும் கையுமாக உலாவுகிறாள். பேய் சுற்றி திரியும் நேரத்தில் கூட வா பேசுவாள். உன் பொண்ணை பத்திரமாக பார்த்து கொள் என்று சூட்சமமாக சொல்லி விட்டுபோய் விடுகிறாள்.

வனஜாக் கூறியதையே நினைத்து வந்த சுந்தரம்’ பார்வதியிடம் இதைப்பற்றி விசாரிக்கிறார். பார்வதி சட்டென்று பதில் ஏதும் கூற முடியாமல் தயங்கினாள். உடனே பார்வதியின் தம்பி, இந்த விசயத்தை சமாளித்து விடுகிறார். அப்பாவுக்கு தன் மேல் சந்தேகம் வரக் கூடாது என்று பார்வதி தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறாள்.

ஆதி ,பார்வதிக்கு போன் செய்கிறார். ஆனால் பார்வதியின் போன் ஸ்விட்ச். -ஆப் என்றதும் கவலை அடைகிறார் ஆதி . ஷியாம் உடனே ஆதியின் போனை வாங்கி சுந்தரத்திற்கு போன் செய்கிறார். சுந்தரம் போன் எடுத்து பேசியதும், பார்வதி சுதாரித்துக் கொண்டாள். ஷியாம் , சுந்தரத்திடம் ஆதிக்கு புதினா டீ வேண்டுமாம், அதற்கு தான் போன் செய்தேன்.

பார்வதி தான் நல்லா செய்வாள். பார்வதி இருந்தாள் கொடுங்க எப்படி புதினா டீ போடனும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்கிறரர். பார்வதி சுந்தரத்திமிருந்து போனை வாங்கி பேசுகிறாள். ஆதி உன் குரல் கேட்ட பிறகு தான் தூக்கம் வரும் அதனால் தான் போன் செய்தேன். சரி வைத்து விடு என்கிறார். சிறிது நேரம் கழித்து பார்வதி கனவில் ஆதியை கொலை செய்வதுப் போல் காண்கிறாள். உடனே ஆதிக்கு போன் செய்கிறாள்.

ஷியாம் தூங்கவே , ஆதி போன் பேச வெளியே வந்து விடுகிறார். அந்த சமயம் நந்தினியின் அடியாட்கள் ஆதியை கொலை செய்ய அறைக்குள் செல்கிறார்கள் . ஆனால் அவர்கள் ஷியாமை கொலைச் செய்ய முயற்சி செய்தனர், ஆதி வந்து ஷியாமை காப்பாற்றி, அவர்களை அடித்து விரட்டினார்.

ஷியாம் என்னடா இது ? என்று கேட்க அதற்கு ஆதி அவர்கள் உன்னைகொல்ல வரவில்லை, கொல்ல வந்தது என்னை. அவர்கள் நந்தினியின் ஆட்கள். 1000 மைல்களுக்கு அப்பால் உள்ள பார்வதி தான், எனக்கு போன் செய்து’ என்னை யாரோ கொலைச் செய்வதாக கனவு கண்டேன் என்று சொல்லி என்னை காப்பாற்றினாள் என்று சொல்லி விட்டு மீண்டும் பார்வதிக்கு போன்செய்து பேசினார்.

அங்கு நடந்த சம்பவத்தை சொல்லி, நீ எப்படி எப்படி முன்னெச்சரிக்கையாக காப்பாற்றுகிறாய் ?. நீ எனக்கு மனைவியாக கிடைத்தது என் வரம் என்கிறார். நந்தினி குருவால் தொடர்ந்து ஆதிக்கு ஆபத்து வருமா? வனஜாவின் சதி தொடருமா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்’