மயக்கம் தெளிந்த ஆதி, பார்வதிக்கு போன் செய்கிறார். இருவரும் 12 மணி நேரம் பிரிவிற்கு பிறகு பேசுவதால் , அவர்களின் பேச்சில் சொற்களுக்கு பதிலாக கண்ணீர் தான் பேசியது. பார்வதி, ஆதியை வீடியோ கால் செய்யச் சொல்கிறாள். ஆதி சிறிது நேரம் கழித்து பேசுவதாக சொல்லி போனை வைத்து விடுகிறார்.

அங்கு அகிலா வீட்டில் உமா, பார்வதி செய்து தந்த சிக்கனை ருசித்து சாப்பிட்டு பார்வதியை புகழ்ந்து தள்ளுகிறாள். அதை கேட்ட வனஜா, உமாவை திட்டி தீர்த்து அடித்து விடுகிறார். இதைக் கண்ட ஐஸ்வர்யா ஏன் இப்படி அடிக்கிறிர்கள்? என்று கேட்கிறார்.

அதற்கு வனஜா நானே அந்த ஆதி பார்வதியின் முன் என்னை அசிங்கப் படுத்திட்டானே என்று கோவாமாக வந்தா இவள் பார்வதியை பாராட்டி தள்ளுகிறாள். ஐஸ்வர்யா, பார்வதியை சும்மா விட கூடாது. ஏதாவது செய்யனும் என்று சொல்லி திட்டம் தீட்டுகிறார்கள்.

பார்வதிக்கு , ஆதி வீடியோ கால் செய்யக் கொடுக்கப்பட்ட நேரம் நெருங்க, நெருங்க ஆதி பயப்படுகிறார். ஏனென்றால் தனக்கு தலையில் அடிப்பட்டிருப்பதை பார்வதி பார்த்தால் கவலை அடைவாளே அதை மறைக்க ஏதாவது ஐடியா கொடு ஷியாம் என்று ஆதி கூறுகிறார்.

அதற்காக வெளியே வரும் போது ஒரு நோயாளி, குரங்கு குல்லா போட்டு இருப்பார். அதை பிடுங்குவதற்காக ஷியாம் சென்று மற்றவர்களிடம் அடி வாங்குகிறார். ஆதி தலையில் கைக் குட்டையைக் கட்டி அடிப்பட்ட இடத்தை மறைத்து பேசுவார்.
இருவரும் வீடியோ காலில் பேசுகின்றனர்.

பார்வதி, பெரியய்யா ஏன் தலையில் கர்சிப் கட்டி இருக்கிங்க அவிழ்த்து விடுங்கள். நல்லா இல்லை என்கிறாள். அதற்கு ஆதி மும்பையில் இது பேஷன் என்றுச் செல்கிறார். நீங்கள் முன்பு போல் இல்லை. முகம் வாடி ஒல்லியாகி இருக்கிங்க என்று பார்வதி ஆதியைப் பார்த்து கேட்கிறாள்.

அதற்கு ஆதி வீடியோ காலில் பேசுவதால் அப்படி தெரியும் என்று கூறி ஒரு வழியாக சமாளித்து விடுகிறார். இதற்கிடையில் தர்ம அடி வாங்கிய ஷியாம் ஆதியின் படுக்கையில் நோயாளியாக படுத்து இருக்கிறார்.

பின்பு ஆதியும், ஷியாமும் மருத்துவமனையிலிருந்து கிளம்பி ஹோட்டலை அடைகின்றனர். வனஜா, ஐஸ்வர்யாவின் அடுத்த கட்ட சதி திட்டம் என்ன? ஆதியும் பார்வதியும் அதை முறியடிப்பார்களா? என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.