பார்வதி லாக்கெட்டை திறக்க முயலும்போது, ஆதியின் போட்டோ கீழே விழுந்து உடைந்து விடுகிறது.அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். வனஜா, உடனே இதை அபசகுணம் என்று சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறாள்.

மும்மையில் நந்தினி, ஆதியை சுப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சிக்கிறாள். ஆனால், அப்பொழுது ஆதி, பார்வதியிடம் போன் பேசிக் கொண்டிருந்தார். தற்செயலாக போன் கீழே விழவே, அதை எடுக்க ஆதி, கீழே குனியும் போது குண்டு தொட்டியில் பட்டு சிதறுகிறது.

அதிர்ச்சியில் ஆதி ஏதும் அறியாமல் திணறி நிற்கிறான். பார்வதி உடனே என்ன ஆச்சு,ஏதோ சத்தம் கேட்டதே என்று கேட்டதற்கு ஒன்றுமில்லைஎன்றுக் கூறி சமாளித்து விடுகிறார் ஆதி.பார்வதி இதை நம்பவில்லை.ஷியாமுக்கு போன் செய்து விவரத்தை கேட்கிறாள். ஷியாம் ஆதிக்கு லேசா தலையில் அடிப்பட்டுள்ளது என்றுஉலரி விடுகிறார்.

பார்வதி , அதைக்கேட்டு துடிக்கிறாள். பார்வதி உடனே ஒரு நோட்டை எடுத்து நடந்த அனைத்து அபச குணங்களை எல்லாம் எழுதி, இது எல்லாம் பரம்பரை செயின் நான் அணிந்திருப்பதால் தான் என்று எழுதிவிட்டு ,செயினை கழட்டி வைக்கிறாள். அகிலாவிடம், மனதில் மன்னிப்பும் கேட்கிறார். வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் கூறுகிறார்.

நாளைய காட்சியில் வீட்டை விட்டு வெளியேறும் பார்வதி, மும்மையில் உள்ள ஆதியைப் பார்க்க வருவதாக கூறப்படுகிறது. இதனால் இனி அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பை கூட்டும் என்று எதிர்ப்பார்க்கலாம் . நந்தினி. குருவின் அடுத்த சதித்திட்டம் என்ன? ஆதியின் அடுத்த நடவடிக்கை என்ன? அடுத்தப்பகுதியில் பார்க்கலாம்.