ஆதியிடம், பார்வதி பேசி விட்டு வீட்டிற்குள் செல்லும் போது, அவளது தந்தை பார்த்து விடுகிறார். தந்தையின் கோபத்திற்கு ஆளாகிறாள் பார்வதி.சுந்தரம் , வனஜா சொல்லும் போது கூட நம்பவில்லை . ஏனென்றால்  உன் மேல் நான் வைத்த நம்பிக்கை அப்படி என்கிறார்.

சொல் யாரிடம், இவ்வளவு நேரம் பேசினாய் சொல் என்று கோபமாக கேட்கிறார். பார்வதி உண்மையை மறைக்காமல் அப்பா, எனக்குபெரியய்யா வை  யாரோ இரண்டு பேர் கொலை செய்ய வருவது போல் கனவு கண்டேன்.

மனதிற்குள் ஒரு வித பயம்.அதற்காக தான் அப்பா பெரியய்யாவுக்கு ‘ஒரு போன் செய்து பேசினேன். அவர் நான் கண்ட கனவு உண்மை தான் என்றார். பெரியய்யா விஷயத்தில் நான் பொய் சொல்ல மாட்டேன் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம் தானே அப்பா என்கிறார் . சுந்தரமும். கோபத்தை  மறந்து சென்றுவிட்டர்.

மறுநாள் காலை ஆதியின் துணிகளை சலவைக்கார் கொண்டு வந்து தருகிறார்.  அதனைக் கொண்டு சென்று, அறையில் வைக்க பார்வதி செல்கிறாள். பின்பு ஆதியின் அறைக்க தவை தாழிட்டு ஆதியின் சட்டையை பார்வதி போட்டு கொள்கிறாள்.  இந்த காட்சியை ஆதிப்  பார்ப்பதற்காக பார்வதி வீடியோகால் செய்கிறாள்.

ஆனால், தலையில் தனக்கு அடிப்பட்டிருப்பது தெரிந்து விடுமே என்று நினைத்து, வீடியோ காலை எடுக்கவில்லை .இறுதியில் தலையில்  ஒரு கர்சிப் கட்டி பார்வதியிடம்  பேசுகிறார் ஆதி.

பார்வதி, தன்னுடைய அறையில், தன்னுடைய சட்டையை அணிந்து இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறார் ஆதி.இருவரும் ஒருவரையொருவர் மறந்து பேசிக் கொண்டிருக்கும் போது வனஜா , இதை பார்த்து விடுகிறாள்.

பார்வதி இருக்கும் நிலையை அகிலாவிடமும் , மற்றவர்களிடமும்,  சொல்லி மாட்டி விட  வேண்டும் என்று நினைத்து  அனைவரையும் அழைக்க செல்கிறாள். நாளைய பகுதியில், வனஜாவின் கையில் சிக்கி தவிப்பாளா பார்வதி? அகிலாவுக்கு, ஆதித்யா- பார்வதி காதல் விவகாரம் தெரிந்து விடுமா?அடுத்த பகுதியில் பார்க்கலாம்.