பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

இதில் நாயகனாக நடித்து வரும் கார்த்திகேயன் (ஆதி) முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் இரண்டு சீரியலில் நடித்த கார்த்தி கல்லூரியில் படிக்கும் போதே யாஷினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து கார்த்திக்கு செம்பருத்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் வாய்ப்பு அவருடைய வாழ்க்கையில் மிக பெரிய திருப்பு முனையையே ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

மேலும் இந்த சீரியலில் கார்த்தியை பார்த்த ரசிகர்கள் கனா காணும் காலங்கள் சீரியலில் பார்த்ததை விட முற்றிலும் மாறியுள்ளார் என அதிர்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

கார்த்திகேயனும் அவருடைய மனைவியின் புகைப்படமும் இதோ உங்களுக்காக