வனஜாவிட மிருந்து, ஆதியின்  சட்டையை  காப்பாற்றுவதற்காக  பார்வதி, வனஜாவை கீழே தள்ளி விடுகிறாள். மிகுந்த கோபத்துடன் வனஜா,.பார்வதியை திட்டி அடிக்க வருகிறார்.

அப்பொழுது அருண் வந்து தடுத்து விடுகிறார்.  வனஜா, அருணிடம் பார்வதி தன்னை கீழேதள்ளிவிட்டாள் என்கிறாள். அதற்கு அருண் பார்வதி அந்த மாதிரி மரியாதைக் குறைவாக செய்யமாட்டார்.

உங்களுக்கு பிரஷர் ஏதாவது இருக்கும் என்று கூறிவிட்டு செல்கிறான். வன ஜா தனக்கு ஏற்பட்ட அசிங்கத்தை ஐஸ்வர்யாவிடம் சொல்லி ஆறுதல் தேடுகிறாள்.  ஆனால் அங்கு  அருண், ஆதியிடம்  நடந்தததை சொல்லி மகிழ்கிறார் .

இதைக்கேட்ட ஆதி , பார்வதியிடம் மறைந்துள்ள வீரம் வெளி வந்துள்ளது என்று கூறுகிறார்.  பின்னர் இந்த மகிழ்ச்சியான விசயத்தை பற்றி பேச பார்வதிக்கு போன் செய்கிறார். பார்வதியை புகழ்ந்து தள்ளுகிறார் ஆதி.

ஆனால் பார்வதி, வனஜாவை நினைத்து பயந்துக் கொண்டிருந்தாள்.  அகிலா, பார்வதியை வீட்டிற்கு அழைக்கிறார். ஏனென்றால் பார்வதி அணிந்திருக்கும் பரம்பரை செயினை போன்று அச்சு அசலாக வேறொரு செயினை செய்வதற்காக ஆச்சாரியை வர வழைக்கின்றனர்.

ஆச்சாரியிடம் மாடல் காட்டுவதற்காக பார்வதியை ,  அழைத்தேன்.நீ அணிந்திரூக்க்ம் லாக்கெட் டிசைனை காட்டு என்கிறாள் அகிலா.. பார்வதி, தன்னுடைய லாக்கெட்டில்  , ஆதியும், நானும் உள்ள போட்டோ தானே இருக்கிறது என்று பயப்படுகிறார் .

ஒரு வழியாக காட்ட முற்படும் போது , ஆதியின் போட் போ கீழே விழுந்து உடைந்து விடுகிறது. பார்வதி செயினால் மாட்டிக்கொள்வாரா? வனஜா – ஐஸ்வர்யா இணைந்து பார்வதியை பழிவாங்குவார்களா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.