ஆதி,  நந்தனியின் ,காரசாரமான  சந்திப்புக்கு  பின்  ஆதியும்,ஷியாமும் அங்கிருந்து  கிளம்பிவிடுகின்றனர். ஆதி  , பார்வதியிடம் டப்-மேஷ் செய்து தனக்கு  அனுப்புமாறு  கூறினார். அதன்படியே பார்வதி   நடித்து அனுப்புகிறேன் என்றாள்.

அகிலாக் கூறியபடி பார்வதி, அகிலா தந்தையின் போட்டோவை சுத்தம் செய்து, பூ போட்டு விளக்கேற்றுகிறாள். இதை கவனித்த வனஜா  விளக்கை வைத்து போட்டோவை எரித்துவிடுகிறாள்.  சிறிது நேரம் கழித்து  ஐஸ்வர்யா தீ பற்றி எரிவதை பார்த்து  அலறி கூச்சலிடுகிறாள்.

அனைவரும்  போட்டோ  எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். வேலையாட்கள் தீயை அனைக்கின்றனர். வனஜா, இந்த அநியாயம் நடக்க  காரணம் பார்வதி கழுத்தில் அணிந்து இருக்கும்  பரம்பரை செயின் தான் எனகிறாள்

ஆனால்  அகிலா அதை மறுக்கிறாள். போட்டோ எரிந்ததற்கும் பார்வதி கழுத்தில் உள்ள பரம்பரை செயினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் . அகிலா தன் அப்பாவின்  பரிவட்டத்தை பூஜையறையில் வைத்து விடுங்கள் என்று பார்வதியிடம் சொல்கிறார்.

நந்தினி,  அடிஆட்களை  வைத்து ஆதியை தாக்குகிறார்கள். இதில்  ஆதிக்கு தலையில் அடிப்பட்டு விடுகிறது.  ஷியாம் , ஆதியை மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கு  ஆதி, தனக்கு  அதிகமாக தலை வலிக்கிறது என்று மருத்துவரிடம் சொல்கிறார் . அதற்காக  டாக்டர்  ,ஆதிக்கு 12 மணிநேரம்  தூங்குவதற்காக ஊசி போடுகிறார்.

டாக்டர் , ஷியாமிடம்   ,அவர் தூங்கி எழுந்தவுடன் மீண்டும் தலை வலிக்கிறது என்று சொன்னால்  ஸ்கேன் எடுக்கலாம்  என்று கூறுகிறார் . அங்கு பார்வதி ஆதி போன் எடுக்காததை நினைத்து  மனம் கலங்குகிறாள்.  தலையில் அடிப்பட்ட ஆதியின் உடல்நிலை  என்னவாகும்? பார்வதிக்கு உண்மை  தெரிய வருமா?  அடுத்த பகுதியில் பார்க்கலாம்.