செம்பருத்தி 25.10.18

செம்பருத்தி 25.10.18 : கொலு முடிவதற்குள் பார்வதியிடம் இருந்து பரம்பரைச் செயினை அகிலா மூலமாகவே கழட்டி காட்டுவேன் என்று போட்ட
சபதத்தை நிறைவேற்றுவதற்காக வனஜா தீவிரமாக திட்டம் தீட்டுகிறாள்.

அதற்காக தூக்க மாத்திரை கலந்த பாதாம் அல்வாவை உமா மூலமாக பார்வதிக்கு கொடுக்கிறாள். ஆனால் இங்கு தான் ஒரு திருப்பம் நடைபெறுகிறது.

பார்வதி சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறாள் வனஜா சந்தேகத்துடன் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் உமா தூக்கக் கலக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறாள். அக்கம் பக்கத்தினர் அனைவருமே கொலுவைப் பார்க்க வந்து விடுகின்றனர். அனைவருமே பார்வதியை பாராட்டுகின்றனர் .

தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் உமாவை வனஜா அறைக்கு அழைத்து கொண்டு சென்று அடித்து மிரட்டுகிறாள்.

வனஜா மிரட்டிய உடன் உமா, நீங்கள் கொடுத்த பாதாம் அல்வாவை நான் சாப்பிட்டு விட்டேன். பார்வதிக்கு வேறு ஒரு ஸ்வீட்டை கொடுத்து விட்டேன் என்ற உண்மையை கூறுகிறார்.

வனஜா மிகுந்த கோபத்துடன்
உமாவை அடித்து விடுகிறாள். மறுநாள் கொலு அலங்காரம் நடைபெற்ற பின் அனைவரும் கொலுவின் முன் அமர்ந்திருக்கின்றனர்.

வீட்டுக்கு வந்திருக்கும் அனைவரும் அகிலாவிடம் ,உங்களது மருமகளை ஒரு பாட்டு பாடச் சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.

அதற்கு ஐஸ்வர்யா எனக்கு பாட்டெல்லாம் வராது என்று கூறி விடுகிறார். பெண்கள் அனைவரும் பார்வதியை பாட்டுப்பாட சொல்கிறார்கள் ஆனால் பார்வதி ஆதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இதனால் ஆதி பார்வதியின் காதல் அகிலாவிற்கு தெரிய வருமா? வனஜா போட்ட சபதத்தில் வெற்றி பெற்று விடுவாளா? என்பது அடுத்த பகுதியில் தான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here