Sembaruthi
Sembaruthi

ஆதி, அனைவரும் உண்பதற்காக உப்புமா செய்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ஷியாம் வேண்டாம் , என்கிறார். ஆனால் பார்வதி பெரியய்யா நன்றாக தான் சமைப்பார் என்று கூறுகிறாள். ஆதியும் உப்புமா செய்து பார்வதிக்கு ஊட்டி விடுகிறார் .

ஷியாம் உப்புமாவை சாப்பிட்டு பார்க்கிறார். கொஞ்சம் கூட நன்றாகவே இல்லை.பார்வதியிடம், ஷியாம் உப்புமா நல்லாவே இல்லை அதை இப்படி சுவைத்து சாப்பிடுகிறாயே? என்று கேட்கிறார். அதற்கு பார்வதி, இல்லை ஷியாம் சார் உப்புமா நல்லா தான் ருசியாக இருக்கிறது.

உங்களுக்கு ஆதி மேல் பொறாமை அதான் இப்படி சொல்கிறீர்கள் என்று கூறுகிறாள். அதைக்கேட்ட ஷியாம் கோபமாக வெளியே சென்று விடுகிறார். பார்வதி ,ஷியாமை நானே சமாதானம் செய்கிறேன் என்று ஆதியிடம் கூறுகிறார். ஷியாமை தேடி வந்த பார்வதி, அவர் எனக்காக செய்தததை நான் எப்படி நன்றாக இல்லை என்று கூற முடியும்.

பெரியய்யா மனசு கஷ்ட படும் அதனால் தான், அப்படி சொன்னேன். நான் ஒரு சமையல் காரி பெரியய்யா கையில் செய்த டிபனை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னை தவறாக நினைக்காதீர்கள் என்று கூறி மன்னிப்பு கேட்கிறார். ஷியாமும் பார்வதி கூறியது தவறில்லை என்பதை புரிந்துக்கொண்டு மன்னித்து விடுகிறார்.

அங்கு அருண், அம்மா பார்வதியை தேடினியா? என்று கேட்பார்களே என்று நினைத்து கொண்டே காபி குடிக்கிறார். சரியாக அகிலா வந்து விடுகிறார் வந்தவர் பார்வதியை சீக்கிரம் தேடு என்று கூறுகிறார். அதைக்கேட்ட அருண், அம்மா தேடிக்கொண்டே தான் இருக்கிறேன். என்று கூறுகிறார்.

பிறகு அருண், ஆதிக்கு போன் செய்து பார்வதியை தேடுமாறு அம்மாவும், சுந்தரமும் என்னைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நான் தான் பார்வதியை மும்மைக்கு அனுப்பி வைத்தேன். என்னிடமே வந்து தேடச் சொல்லும் போது சங்கடமாக இருக்கிறது.

சீக்கிரம் பார்வதியை அனுப்பிவை அண்ணா என்று அருண் கூறுகிறார். அதற்கு ஆதி பார்வதிக்கு ஏற்பட்ட விபத்தை பற்றி அருணிடம் கூறுகிறார்.அதனால் நாங்கள் இருவருமே ஒன்றாக சேர்ந்து சென்னைக்கு வருகிறோம்.என்று கூறுகிறார். சரி. சீக்கிரம் வாங்க. ஏர்ட் போர்ட்டில் உங்களை பிக் – அப் செய்து கொள்கிறேன் என்று அருண் கூறுகிறார்.

இதற்கிடையில் அருண், ஆதியிடம் பேசிய அனைத்தையுமே உமா கேட்டு விடுகிறார். இன்றைய எபிசோட்டில் விமான நிலையத்தில் ஆதியை வரவேற்க அகிலா வந்து நிற்கிறார். அகிலாவை பார்க்கும், ஷியாம், ஆதி, பார்வதி அனைவரும் அதிர்ந்து நிற்கின்றனர். அகிலாவிடம் மாட்டிக்கொள்ளும் பார்வதியின் நிலை என்ன?அருண் பேசியதை ஒட்டுக் கேட்ட உமாவின் திட்டம் என்ன?. அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.