
ஷியாம், ஆதிக்கு மும்மையில் நடந்த அனைத்து கொலை முயற்சிகளைப் பற்றி பார்வதியிடம் கூறுகிறார்.இதைக்கேட்டு பார்வதி துடிக்கிறாள். அகிலா, பார்வதி வீட்டை விட்டு சென்றது, பரம்பரை செயினை அவிழ்த்து வைத்து சென்றது, இதையே நினைத்து கொண்டு இருந்தாள்.
அகிலா அவரது கணவரிடம் , ஆதியின் போட்டோ கீழே விழுந்ததில் இருந்தே, மும்யையில், ஆதிக்கு ஏதோ நடந்து உள்ளது என மனம் சொல்கிறது என்று கூறுகிறார்.
உடனே மும்பையில் உள்ள ராம்சிங் என்பவரிடம், ஆதியை பற்றி முழு விவரத்தை விசாரிக்கச் சொல்கிறார். அவர் உடனே , நந்தினி, ஆதியின் மீது நடத்திய அனைத்து கொலை முயற்சிகளைப் பற்றி கூறி விடுகிறார். இதைக் கேட்ட அகிலா கனலாய் கொதிக்கிறார்.
உடனே அகிலா, மும்பையில் உள்ள நந்தினி வீட்டிற்குள், அவளுக்கு தெரியாமலேயே உள்ளே வந்து அமர்கிறார். படுக்கையிலிருந்து கண் விழித்த நந்தினி, அகிலாவை பார்த்து அதிர்ச்சியில்உறைகிறார்.
அகிலா , நந்தினியை கன்னத்தில் அறைந்து விட்டு, துப்பாக்கி எடுத்து சுட முயற்சிக்கிறாள், ஆனால் நந்தினி, அகிலா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள். அகிலா அவளை நோக்கி சுட்டாள், ஆனால் குண்டுகள் அவள் மீது படவில்லை. உனக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தவே, உன்னனச் சுற்றி குண்டுகளை சுட்டு வீணடித்தேன்.
தவறு செய்தவர்கள், காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும், மன்னிப்பது ஆதி கடவூர் வம்சத்தின் பழக்கம், இனி நீ வாழும் வாழ்க்கை, நான் போட்ட பிச்சை என்பதை நீ, எப்பொழுதும் மறக்கக்கடாது என்கிறாள் அகிலா. நந்தினியின் அடியாட்களைக் கூட விலைக்கு, வாங்கி விடுகிறார்.
அடுத்த பகுதியில் ஆதியும், பார்வதியும் ஒன்றாக அமர்ந்து ஜூஸ் “குடிக்கிறார்கள். அந்த சமயம் ஹோட்டலுக்கு வருகிறாள் அகிலா. பார்வதியும் , ஆதியும் அகிலாவிடம் மாட்டிக் கொள்வார்களா? நந்தினியின் அடுத்தக்கட்ட தாக்குதல் திட்டம் என்ன? என்பதை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.