Seema Raja

Seema Raja : சிவகார்த்திகேயனின் சீமாராஜா படம் வெற்றியா? தோல்வியா? என அப்படத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

சின்னத்திரையில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி தொகுப்பாளர், துணை நடிகர், ஹீரோ, முன்னணி நடிகர் என படிப்படியாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் சயின்ஸ் பிக்சன் படம் ஒன்றிலும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த படம் சீமராஜா. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த படம் வெற்றி படமா? தோல்வி படமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இபடத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா சீமாராஜா வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என கூறி ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.