Selvaraghavan's Next

Selvaraghavan’s Next : செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய ஆசையை தன்னுடைய ட்வீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியாகின இருந்த புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல படங்கள் ஹிட்டாகி இருந்தன.

தற்போது சூர்யாவை வைத்து NGK படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது செல்வராகவன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய ஆசையை கூறியுள்ளார். அதாவது அவர் கூறியிருப்பதாவது

வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன்.

ஆயினும் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பது தான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம் என கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தியும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.