இயக்குனர் செல்வராகவன் பாகாசூரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது நன்றியை ரசிகர்களுக்கு பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் பீஸ்ட், சாணிக் காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகாசூரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிப்பில் சாம் CS இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நட்டி(நட்ராஜ்) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வரும் நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது twitter பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், அயராத உழைப்பிற்கும் , புதிய முயற்சிகளுக்கும் என்றும் தோள் கொடுக்கும் ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றிகள். என குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.