இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்திருக்கும் உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

அந்த வகையில் அவரது நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பாகாசூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் வருத்தத்துடன் வெளியிட்டு இருக்கும் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், அனுபவத்தில் சொல்கிறேன் நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள், இதுவரை வேலையைத் தவிர யோசிக்கவில்லை அதனால் எனக்கு நண்பர்களே கிடையாது. நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாக உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன்’ எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.