
தமிழகத்தில் மாமியார் மருமகள் சண்டையை தீர்த்து வைத்ததே நாங்க தான் என அதிமுக அமைச்சர் கூறி இருப்பது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
ஜெயலலிதாவிற்கு பிறகு அவரது அமைச்சர்கள் சிலர் பேசுவது சமீபகாலமாக கேலிக்குரிய வகையில் உள்ளது. அவ்வாறு பேசுவதை ஏதோ அம்மா புகழ் பாடுவதாய் எண்ணி சம்பந்தமே இல்லாமல் பேசுகின்றனர்.
இவ்வாறு சமீபத்தில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் மகளிருக்கான மானிய விலை இருசக்கர வாகனம் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தொட்டில் குழந்தை திட்டத்திலிருந்து இப்போது வழங்கிவரும் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் வரை மகளிருக்கான திட்டத்தை நாம் அடுக்கி கொண்டே போகலாம்.
ஜெயலலிதாவின் மிக்சி,கிரைண்டர் திட்டம் எத்தனை மாமியார், மருமகள் சண்டையை தீர்த்து வைத்திருக்கிறது தெரியுமா.. இந்த திட்டம் மாமியார், மருமகள் சண்டையை போக்கியுள்ளது.
அதற்கு முன் நான்தான் மாவாட்ட வேண்டுமா? நீ அரைக்க கூடாதா? என்று சண்டைகள் எழும் அந்த சண்டைகளை தீர்த்து வைத்தது எந்தாய் ஜெயலலிதா ஆவார் இவ்வாறு கூறினார். இவ்வாறு அவர் பேசியது சிலருக்கு நகைப்பை ஏற்படுத்தியது.