Sellur K Raju
Sellur K Raju

Sellur K Raju – சென்னை: சென்னை மாநகரில் நடமாடும் நியாய விலைக்கடைகள் கொண்டு வர ஆய்வு மேற்கொண்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளர்.

சட்டபேரவையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ” சென்னை போன்ற பெருநகரங்களில் நியாய விலை கடைகளுக்கு இடம் கிடைப்பது அரிதாக உள்ளது”.

எனவே சென்னை மாநகரில் ஏற்கனவே இருக்கும் நடமாடும் கடைகள் உட்பட மேலும் சில நடமாடும் நியாய விலைக்கடைகள் கொண்டு வர ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே 2 நாடமாடும் நியாய விலைக்கடைகள் அமைக்கப்பட்டு 10,963 அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று, சட்டபேரவையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்: மதுரையில் ரூ.5 கோடி செலவில் தமிழன்னை சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பும் போது, அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “சென்னை அண்ணா நூலகத்திற்கு ரூ.6 கோடிக்கு புதிய புத்தகங்கள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்”.