
Seethakathi Trailer : சீதக்காதி படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் என்ற படத்தை இயக்கிய பாலாஜி தரணி தரண் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் தான் சீதக்காதி. விஜய் சேதுபதிக்கு இது 25-வது படமாகும்.
முழுக்க முழுக்க வித்தியாசமான கதையில் இப்படம் உருவாகியுள்ளது என்பது படத்தின் ட்ரைலரை பார்க்கும் போதே தெளிவாக தெரிகிறது.
படத்தில் விஜய் சேதுபதி மிகவும் வயதான தோற்றத்தில் ரசிகர்கள் பலரும் கொண்டாடும் கலைஞராக நடித்துள்ளார்.
அவருக்கு மொத்தமாக 40 நிமிட காட்சிகள் எனவும் கூறப்படுகிறது.
ஆனாலும் ஐயா கதாபாத்திரம் மிகவும் வலுவான கதாபாத்திரமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரைலர் முழுவதிலும் விஜய் சேதுபதி பேசும் ஒரே வசனம் ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான், நானே சரித்திரமாக மாறி விட்டேன் என்பது தான்.
மிக பெரிய ரசிகர் கூட்டம், திரையுலக பிரபலங்களின் எதிர்பார்ப்பு என அனைத்தும் இருந்தும் ஐயாவாக நடித்துள்ள விஜய் சேதுபதி ஏன் நடிக்க வரவில்லை என்பது தான் இப்படத்தின் முக்கிய கருவாக இருக்கும் என்பதும் ட்ரைலரில் தெரிய வருகிறது.
