Seethakaathi Tamil Review

Seethakaathi Review : பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் அவரது 25-வது படமாக வெளியாகியுள்ள படம் சீதக்காதி.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஊர்வசி அர்ச்சனா, மௌலி, இயக்குனர் மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ் குமார், காயத்ரி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்களம் :

நாடகக் கலையை மையமாகவும் இன்றைய தமிழ் சினிமாவின் நிலைமையை மையமாக கொண்டு இது வரை தமிழ் சினிமா பார்க்காத வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

70-வது முதியவராக நாடகக் கலைஞராக நடித்துள்ள விஜய் சேதுபதி இப்படத்தின் மூலம் சொல்லும் விசயங்கள் எதார்த்தமானவை, உண்மையானவை.

விஜய் சேதுபதி :

விஜய் சேதுபதி தன்னுடைய 25-வது படமாக மிகவும் வித்தியாசமான கதையை தேர்வு செய்துள்ளார். முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்போரை கவர்கிறார்.

மௌலி :

மௌலி அவர்கள் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இப்படம் முழுவதும் வலம் வருகிறார். அவரின் நடிப்பை பற்றி யாருமே சொல்ல வேண்டியதில்லை. வழக்கம் போல இப்படத்திலும் எதார்த்தமான நடிப்பால் நம்மை கட்டி போட்டுள்ளார்.

இதர நடிகர், நடிகைகள் :

ஊர்வசி அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ் குமார், கருணாகரன் என பலர் இணைந்து நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் அவரது நடிப்பை சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் யாருடைய நடிப்பை குறை கூறும் அளவிற்கு இல்லை என்றே கூறலாம்.

தொழில்நுட்பம் :

இசை :

96 படத்திற்கு இசையமைத்து இருந்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். 96 படத்தை போலவே படம் முழுவதும் தன்னுடைய இசையால் நம்மை மெய் மறக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவு :

சரஸ்காந்த் டி.கே என்பவர் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவரது தத்ரூபமான பதிவுகள் பாராட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன.

எடிட்டிங் :

ஆர்.கோவிந்த் ராஜ் என்பவர் இப்படத்திற்கான எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். படத்திற்கு என்ன தேவையோ அதனை கச்சிதமாக எடிட் செய்து கொடுத்துள்ளார்.

இயக்குனர் :

இயக்குனர் பாலாஜி தரணி தரன் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை போலவே இந்த படத்தையும் காமெடி கலந்த கலையை போற்றும் படமாக எடுத்துள்ளார்.

இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு கதையை கையில் எடுத்து அற்புதமாக இயக்கி கொடுத்திருப்பது நிச்சயம் பாராட்ட வேண்டிய விசியம்.

தம்ப்ஸ் அப் :

1. விஜய் சேதுபதி, மௌலி என ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு
2. படத்தின் இசை
3. முற்றிலும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருப்பது.

4. இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களது சொந்த குரலில் லைவ்வாக பேசி நடித்துள்ளனர், டப்பிங் இல்லாமலும் காட்சிகளுக்கு ஏற்றார் போல பேசி நடித்திருப்பது அற்புதம்.

தம்ப்ஸ் டவுன் :

1. ஆரம்பத்தில் படம் கொஞ்சம் மெதுவாக நகர்வது போல் இருந்தது. ஆனால் அதன் பின்னர் படம் முழுவதும் நம்மை கட்டி போட்டு விட்டது.

வீடியோ விமர்சனம் : 

YouTube video

REVIEW OVERVIEW
சீதக்காதி விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
seethakaathi-reviewமொத்தத்தில் சீதக்காதி இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வித்தியாசமான கதை, பார்க்க வேண்டிய படம்.