இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டி சீமான் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரை படைத்திருக்கும் இவரது இயக்கத்தில் கடந்த 31ஆம் தேதி விடுதலை திரைப்படம் வெளியானது. சூரி கதாநாயகனாக நடித்து மிரட்டி இருக்கும் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பலராலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கும் நிலையில் வெற்றிமாறனை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. அப்பேட்டியில் அவர், தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் இயக்குனர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் வரிசையில் தற்போது வெற்றிமாறன் மற்றும் ராம் ஆகியோர் சிறந்த படங்களை கொடுத்து வருகிறார்கள். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் காடுமலை என கடுமையாக உழைத்துள்ளார். அவர் மனித வடிவில் இருக்கும் மிருகம். அவர் வெறியில் படம் எடுக்கிறார். அது பாராட்டுக்குரிய விஷயம் என்று கூறியிருக்கிறார். இவரது இந்த பாராட்டுக்குரிய தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.