Seeman Speech
Seeman Speech

Seeman Speech – சென்னை: “தமிழகத்தில் தாமரை மலராது, படர் தாமரை வேண்டுமானால் மலரும்” என்று நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக குறித்து கிண்டல் செய்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் 222-வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது.

அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டுள்ளார்.

அதன்பின் விழாவில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்: ‘ பாஜகவிற்கு தமிழகம் மீது எப்போதும் அக்கறை கிடையாது.

தமிழர்களை அவர்கள் எப்போதுமே ஒரு பொருட்டாக மதித்தது இல்லை.

தமிழக மக்கள் பாஜகவிற்கு வெறும் ஓட்டுகள் மட்டும் தான் தவிர, தமிழக மக்கள் மீது பாஜகவிற்கு எந்தவொரு அக்கறையும் கிடையாது’..

மேலும், பாஜக அக்கறை, கஜா புயலின் போதே நமக்கு கண்கூடாக தெரிந்துவிட்டது.

பிரதமர் மோடி இன்னும் கூட கஜா புயலின் சேதங்களை குறித்து தமிழகத்தில் வந்து பார்வையிடவில்லை, மற்றும் எந்தவொரு நிவாரணமும் அளிக்கவில்லை.

மேலும், காவிரி, பாலாறு என்று நாம் தண்ணீர் இல்லாமல் இங்கு கஷ்டப்படுகிறோம். இவர்களுக்கு தாமரை மலர தண்ணீர் வேண்டுமாம். முதலில் விவசாயிகளுக்கு தண்ணீர் வரட்டும். பிறகு தாமரை மலர்வதை பார்க்கலாம் என்று பேசினார்.

பிறகு ,”தமிழகத்தில் தாமரை எப்போதும் மலராது. வேண்டுமானாலும் தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் வருமே ஒழிய தாமரை வர வாய்ப்பில்லை” இவ்வாறு கிண்டல் செய்து பேசினார்.