![Seeman Seeman](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/01/Seeman-696x392.jpg)
Seeman : அறிக்கை விட்ட அஜித் அந்த அறிக்கையில் இதையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என சீமான் அஜித்துக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த அறிக்கை குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் 100 பேர் பாஜகவில் இணைந்திருந்தனர். அப்போது தமிழிசை அஜித் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை அடுத்து அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு என்னுடைய பெயரையும் ரசிகர்களின் பெயரையும் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அஜித் அரசியலுக்கு வர மாட்டேன் என தெளிவான கூறி இருந்ததை பலரும் பாராட்டி வந்த நிலையில் சீமானும் தற்போது பாராட்டியுள்ளார்.
மேலும் அஜித் அந்த அறிக்கையில் என்னுடைய பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டாம் என கூறியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.