தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களை வெளியிட மாட்டோம் என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்புக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக வெளியாக இருக்கும் இப்படம் தெலுங்கில் வெளியாக சிக்கல்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களை வெளியிட விடமாட்டோம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதாவது சீமான் அவர்கள், “இது விஜய் என்னும் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கல் அல்ல, தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிரான முடிவை தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திரும்பி பெறாவிட்டால் தமிழ்நாட்டில் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்!” என்று கூறியுள்ளார். மேலும் அவர் விழா காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்த அறிவிப்பிற்கும் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்த பரபரப்பான தகவல்கள் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.