விஜயின் அரசியல் வருகைக்காக காத்திருப்பதாக சீமான் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

கோலிவு திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

அதாவது தினத்தந்தி அதிபர் டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்து அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த சீமான், அதற்கான முயற்சியை தான் தம்பி செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். தம்பியெல்லாம் அரசியலுக்கு வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்று கூறியுள்ளார். மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களின் ஆதரவு இருக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்க அதற்கு அவர் நான் யாரையும் ஆதரிக்க வேண்டியதில்லை. தம்பிதான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.