பத்துதலை படத்தில் குத்தாட்டம் போட சாயிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பத்து தலை. கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த ப்ரியா பவானி சங்கர் நித்திய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் சிம்பு வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகை சாயிஷா ரவுடி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது அவர் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட 40 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் நடிகர் ஆர்யா மனைவியின் இந்த நடனத்தை பார்த்துவிட்டு பிக் ஸ்கிரீனில் உன்னை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். இது வெறும் ஆரம்பம் தான் என பதிவு செய்துள்ளார்.