Sathya Jyothi Flims Next

Sathya Jyothi Flims Next : தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை அடுத்து சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ள படம் என்ன? அடுத்த ஹீரோ யார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

வெற்றிமாறனும் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள அசுரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

ஆனால் உடனே இந்த படத்தை துவங்கவில்லை. திரைக்கதை அமைப்பதற்காக வெற்றிமாறன் கால அவகாசம் கேட்டுள்ளார்.

இதனால் தனுஷ் இந்த படத்திற்கு முன்னரே இரண்டு படங்களில் நடித்து விட முடிவு செய்துள்ளார்.

ஒன்று ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் கொடி பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

துரை செந்தில் குமார் இயக்க உள்ள படத்தை விஸ்வாசம் ரிலீசுக்கு பிறகு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம்.

இதனையடுத்து ராம் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படம் 2019-ன் வருட இறுதியில் வெளியாக உள்ளதாம் அந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆக மொத்தத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் 2019-ல் தனுஷின் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.