தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் படம் சர்கார். முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தை பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து அக்டோபர் 2-ல் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் சர்கார் கொண்டாட்டம் தொடங்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது.

மேலும் அந்த அறிவிப்பில் காலை 11 மணிக்கு முதல் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது முதல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதோ அந்த அறிவிப்பு